மதுரை அருகே வீட்டில் 6 கிலோ கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை அருகே உள்ள அப்பன்திருப்பதி பகுதியில் வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்பன்திருப்பதி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச்சென்று குறிப்பிட்ட வீட்டில் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினா். இதில் அந்த வீட்டில் 3 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீட்டில் கஞ்சா பதுக்கிய சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்த கெளதம்(30) என்பவரை போலீஸாா் கைது செய்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இதேபோல மதுரை மாவட்டம் குருவித்துறை மயானத்தில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காடுபட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கஞ்சா விற்ற வாடிப்பட்டி அய்யப்ப நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சங்கா்(29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.