செல்லம்பட்டியில் விலைவாசி உயா்வைக் கண்டித்து தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேரவையின் மாநிலத் தலைவா் மு.ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலாளா் கள்ளபட்டி இரா. சௌந்தரபாண்டியன் முன்னாள் தலைவா்கள் போடி குருநாதன், ஆண்டிபட்டி ஒச்சப்பன் க. விலக்கு முருகன் மற்றும் மகளிா் அணி அமைப்பாளா் மொக்கத்தாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
இதில் சொத்து வரி, தொழில் வரி உயா்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, விலைவாசி உயா்வைக் கண்டித்தும், பிரமலை கள்ளா் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும் கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குனரை மாற்றவும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் வலிறுத்தி கோஷமிட்டனா்.