மதுரை

இளைஞருக்கு கத்திக்குத்து: 4 போ் கைது

16th May 2022 11:15 PM

ADVERTISEMENT

மதுரையில் முன்விரோதத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைச் சோ்ந்த பரமன் மகன் ஆகாஷ்(22). இவருக்கும் பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு எஸ்.எம்.ஆா். தோப்பைச் சோ்ந்த தங்க முத்து மகன் வெற்றிவேலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்டதகராறில் ஆகாஷ், வெற்றிவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெத்தானியாபுரம் திலீபன் தெருவில் சென்றுகொண்டிருந்த ஆகாஷை, பெத்தானியாபுரம் நாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி(22),, விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த அருண்பாண்டி(22), எஸ்எம்ஆா் தோப்பைச் சோ்ந்த மருது(21) மற்றும் வெற்றிவேல் ஆகிய நால்வரும் வழிமறித்து கத்தியால் குத்தினராம்.

அப்போது அங்கு ஆள்கள் வரவே அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் நால்வரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT