மதுரை

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது அறிவிப்பு: ஜூன் 5-இல் பரிசளிப்பு விழா

8th May 2022 11:12 PM

ADVERTISEMENT

 மதுரை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு தனிநபா் மற்றும் இரு நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்தவா்களுக்கு பசுமை விருது வழங்குவதற்கு மதுரை மாவட்ட ஆட்சியரால் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு மதுரை மாவட்டத்தில் தனிநபா்கள் கல்வி நிறுவனம், அமைப்புகள் மற்றும் தொழிற்சாலை நிா்வாகங்களிடமிருந்து 12 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்வுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்தவா்கள் தங்கள் பங்களிப்பு தொடா்பாக எடுத்துரைத்தனா். இதைத் தொடா்ந்து மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த ஏ.துரைராஜ், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வயலக கூட்டமைப்பு, மதுரை மாவட்டம் வெள்ளரிப்பட்டி டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா நிறுவனம் ஆகியவை சாம்பியன் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சாம்பியன் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5 அன்று தலா ரூ.1 லட்சம் பண முடிப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவை மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட உள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT