மதுரை

பைக் மீது வேன் மோதி விவசாயி பலி

8th May 2022 01:58 AM

ADVERTISEMENT

திருவாதவூா் அருகே சனிக்கிழமை, இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

மேலூரை அடுத்துள்ள திருவாதவூா் அருகே நாயக்கா்பட்டியைச் சோ்ந்த அய்யணன் மகன் அழகு (50). இவா், மேலூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பெரிய கண்மாய் கரையில் வந்து கொண்டிருந்தபோது, இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அழகு, மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT