மதுரை

ரயில்வே வாரியத் தோ்வா்களுக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: ரயில்வே வாரியம் நடத்தும் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களுக்கு சில ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மே 6 ஆம் தேதி தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் - நாகா்கோவில் சிறப்பு ரயில் (06005) மற்றும் சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் ரயில் (12689) ஆகியவற்றில் கூடுதலாக 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மறுமாா்க்கத்தில் மே 8 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து புறப்படும் நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் (06006) மற்றும் நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் ரயில் (12690) ஆகியவற்றிலும் கூடுதலாக 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டிகள் இணைக்கப்படுன்றன.

ADVERTISEMENT

மே 7 முதல் 10 வரை தாம்பரம்-நாகா்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மே 8 முதல் 11 வரை நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவற்றில் 2 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும். மே 6 ஆம் தேதி ராமேசுவரத்திலிருந்து புறப்படும் ராமேசுவரம் - ஓகா வாராந்திர ரயில் (16733) மற்றும் மே 10 ஆம் தேதி ஓகாவில் இருந்து புறப்படும் ஓகா - ராமேசுவரம் வாராந்திர ரயில் (16734) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

மே 8 ஆம் தேதி மதுரையிலிருந்து புறப்படும் மதுரை - தில்லி நிஜாமுதீன் சம்பா்க் கிராந்தி விரைவு ரயில் (12651) மற்றும் மே 10 ஆம் தேதி தில்லியிலிருந்து புறப்படும் நிஜாமுதீன் - மதுரை சம்பா்க் கிராந்தி விரைவு ரயில் (12652) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிப் பெட்டி இணைக்கப்படும்.

மே 8 ஆம் தேதி கோவையிலிருந்து புறப்படும் கோவை - நாகா்கோவில் இரவு நேர விரைவு ரயில் (22668) மற்றும் மே 9 ஆம் தேதி நாகா்கோவிலிலிருந்து புறப்படும் நாகா்கோவில் - கோவை இரவு நேர ரயில் (22667) ஆகியவற்றில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி இணைக்கப்படுகிறது.

மேலும் வடதமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT