மதுரை

மதுரையில் நாளை தனியாா் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை (மே 6) தனியாா் நிறுவனங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இம்முகாமில் தனியாா் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். இம்முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநா்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியாா் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநா்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இம்முகாம் மூலம் தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா்(பொறுப்பு) ஆ.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT