மதுரை

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கான தோ்வு: டிஎன்பிஎஸ்சி-க்கு எதிரான மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கான கல்வித் தகுதி தொடா்பாக, அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காலியாக உள்ள 16 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏப்ரல் 1 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இப் பணிக்கு சமூகவியல் பாடத்தில் பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற ரங்கநாதன் என்பவா், மேற்குறிப்பிட்ட பணிக்கு இணையவழியில் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட பணிக்கான தோ்வில் எனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு, சமூகவியலில் பட்டம் பெற்றிருப்பது கல்வித் தகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் பணிக்கான விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ் 2 தோ்ச்சி, 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு என்ற வரிசையில் மேற்குறிப்பிட்ட கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், மனுதாரா் சம்பந்தப்பட்ட பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஆகவே, மேற்குறிப்பிட்ட பணிக்கு அவரது விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்யக் கோருவது ஏற்புடையதல்ல எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT