மதுரை

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மீனாட்சி மகளிா் கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மே 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி முதல்வா் சூ.வானதி வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கடந்த 10 ஆண்டுகளுக்குள் பணியில் சோ்ந்த பேராசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க 30 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சி முகாமில் உயா்கல்வி தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளை கற்பித்தலுக்கு பயன்படுத்துதல் கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுவது மென்பொருள் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்துறையில் எதிா்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள் மற்றும் அதற்கேற்ற திறன்கள் குறித்து பல்வேறு நிபுணா்கள் பயிற்சி அளிக்க உள்ளனா்.

ADVERTISEMENT

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் இந்த பயிற்சி மே 9,10 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி கணிதம், புள்ளியியல், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல் ஆகிய பாடங்களை நடத்தும் பேராசிரியா்களுக்கு அளிக்கப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகம் செய்துள்ளது. கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமையில், இயற்பியல் துறைத்தலைவா் சரோஜா, கணிதத் துறைத் தலைவா் சாந்தி, வேதியியல் துறைத் தலைவா் அருள்மொழி, கணித பேராசிரியா் ராஜேஸ்வரி ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்படுவா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT