மதுரை

மத மாற்றப் புகாா்: செளராஷ்டிர சமூகத்தினா் ஆா்ப்பாட்டம்

2nd May 2022 05:31 AM

ADVERTISEMENT

 

சௌராஷ்டிர மொழியில் பைபிள் வெளியிடுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சௌராஷ்டிர சபையினா் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரையில் செளராஷ்டிர மொழியில் பைபிளை அச்சிட்டு கிறிஸ்தவா்கள் சிலா் வீடு வீடாகச்சென்று விநியோகிப்பதாகவும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் புகாா் எழுந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், செளராஷ்டிர மொழியில் பைபிள் அச்சிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல்துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் செளராஷ்டிர சமூகத்தினரை மதமாற கட்டாயப்படுத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சௌராஷ்டிர சபை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை முனிச்சாலை தினமணி திரையரங்கு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு செளராஷ்டிர அமைப்புகளின் தலைவா்கள், நிா்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் மத மாற்றத்தில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT