மதுரை

மதுரையில் இடியுடன் மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

2nd May 2022 05:32 AM

ADVERTISEMENT

 

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

மதுரையில் கடந்த இரு வாரங்களாக கடும் வெயில் நிலவிவந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனா். பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் இரவில் மதுரை தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம், அண்ணாநகா், பெரியாா் நிலையம், செல்லூா், கோ.புதூா் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அரைமணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

ADVERTISEMENT

மதுரையில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழையால் குளிா்ச்சி நிலவியதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT