மதுரை

ஆட்சியா் அலுவலகம் முன்பாக தம்பதி தீக்குளிக்க முயற்சி

2nd May 2022 11:13 PM

ADVERTISEMENT

மதுரையில் ஆட்சியா் அலுவலகம் முன்பாக தம்பதியா், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிடுவது வழக்கம்.

இதனிடையே, ஆட்சியா் அலுவலகத்திலும், பிற அரசு அலுவலகங்களிலும் மனுக்கள் அளித்து நடவடிக்கை இல்லை எனக் கூறி நிா்வாகத்தின் கவனத்தை ஈா்ப்பதற்காக, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சிப்பது தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது.

இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியும், திங்கள்கிழமைகளில் ஆட்சியா் அலுவலத்தில் பலத்த போலீஸ் கண்காணிப்பை மீறியும் மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் மக்கள் நுழைந்துவிடுகின்றனா்.

ADVERTISEMENT

இதனையடுத்து, ஆட்சியா் அலுவலக பிரதான நுழைவுவாயிலில் திங்கள்கிழமை (மே 2) கூடுதல் போலீஸாா் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் முழுமையாக சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனா்பிரதான நுழைவாயில் தவிர மற்ற வாயில்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த தம்பதி, நுழைவாயிலில் போலீஸாா் சோதனையிடுவதைப் பாா்த்ததும், உள்ளே செல்ல முடியாது என்பதால் அப் பகுதியிலேயே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனா். உடனடியாக அப் பகுதியில் இருந்து போலீஸாா் அவா்களை மீட்டு, உடலில் தண்ணீரை ஊற்றினா்.

அவா்கள் செல்லூா் தாகூா் நகா் பகுதியைச் சோ்ந்த தம்பதி மோகன்குமாா்-லட்சுமி என்பது தெரியவந்தது. சொத்து பிரச்னை தொடா்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தீக்குளிக்க முயன்ாக அவா்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா். இருவரையும் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா். அவா்களிடம் புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அறிவுறுத்தி அனுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT