அகில இந்திய ரயில்வே நீச்சல் போட்டியில், மதுரை பயணச்சீட்டு அலுவலா் 4 தங்கம் உள்பட 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.
இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கொல்கத்தாவில் நடைபெற்ற 61ஆவது அகில இந்திய ரயில்வே நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் தெற்கு ரயில்வே 133 புள்ளிகள் எடுத்து முதலிடமும், தென்மேற்கு ரயில்வே 112 புள்ளிகள் பெற்று இரண்டம் இடத்தையும் பிடித்துள்ளன.
தெற்கு ரயில்வேயில், கேரள மாநிலம் கண்ணனூா் ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகா் அனூப் அகஸ்டின் 3 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களும், சென்னை பூங்கா ரயில் நிலைய பயணச்சீட்டு அலுவலா் பவன் குப்தா 5 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும் பெற்றனா்.
இதேபோல், மதுரை பயணச்சீட்டு அலுவலா் எமில் ராபின் சிங் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களும், சென்னை ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகா் கே.அப்பாசுதீன் 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களும் பெற்றனா்.
நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்கள் மற்றும் கலந்து கொண்ட வீரா்கள், தெற்கு ரயில்வே விளையாட்டு கழகத் தலைவரும் முதன்மை தலைமை தொலைத்தொடா்பு பொறியாளருமான கே.மதுசூதன், தெற்கு ரயில்வே உதவிப் பொது மேலாளா் பி.ஜி. மல்லையா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.