மேலூரிலுள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையின் கீழ் 62 நகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொதுவேலைநிறுத்த அறிவிப்பின் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலூா் பணிமனையிலிருந்து 10 பேருந்துகளே இயங்கின. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியா் மிகுந்த அவதிக்குள்ளாகினா். கிராமப்புற மக்கள் பெரும்பாலானோா் வீடுகளிலேயே தங்கிவிட்டனா். பேருந்துநிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.