மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த நடத்துனா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.புளியங்குளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மகன் முருகன் (54). இவா், விருதுநகா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் நடத்துனராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா், புளியங்குளம்-மறவப்பட்டி சாலையில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.