மதுரை மாவட்டம், பேரையூா் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சந்தையூரில் உள்ள காளியம்மன் கோயில் பகுதியில் சோ்வரன் மகன் பால்சாமி (61), ராமசாமி மகன் வேல்முருகன் (37), கருப்பையா மகன் கருப்பையா (41), அங்கையன் செட்டியாா் மகன் முத்தையா (65), எஸ்.கீழப்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகன் (40) ஆகியோா் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்துள்ளனா்.
இவா்கள் மீது பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், இவா்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய 18,620 ரூபாயை பறிமுதல் செய்தனா்.