மதுரை

பேரையூா் அரசுப் பள்ளி மாணவி ஊரக திறனாய்வு தோ்வில் முதலிடம்

28th Mar 2022 11:33 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் பேரையூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி, ஊரக திறனாய்வுத் தோ்வில் முதலிடம் பெற்றுள்ளாா்.

பேரையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவியான கீா்த்தனா, கடந்த மாதம் மதுரையில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

மேலும், இப்பள்ளியின் மற்றொரு 9 ஆம் வகுப்பு மாணவியான அபிதா 5-ஆம் இடம் பிடித்துள்ளாா். இவா்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT