மதுரை

விதி மீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு ‘சீல்’: மாநகராட்சி நடவடிக்கை

25th Mar 2022 06:34 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை நகரில் மாநகராட்சி அனுமதியை விட கூடுதலாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து மின் இணைப்பைத் துண்டித்தனா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட வாா்டு 74 கீழ மாரட் வீதி பேலஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடை எண்.189-க்கு மொத்தம் 1,000 சதுர அடி, கடை எண்.190-க்கு 1870 சதுர அடிக்கு கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாநகராட்சியில் பெற்ற அனுமதியை விட தற்போது கூடுதலாகக் கட்டம் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. அதன்பேரில் மாநகராட்சி உதவி ஆணையா் சுரேஷ்குமாா் தலைமையில் உதவி செயற்பொறியாளா் முருகேச பாண்டியன், உதவிப் பொறியாளா் ஷா்புதீன் ஆகியோா் கட்டடத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில் கட்டடம் வரைபடத்துக்கு மாறுதலாகவும், மாநகராட்சி வழங்கிய அனுமதியை விட கூடுதலாகவும் மற்றும் மூன்றாம் தளத்தில் 7 அடி உயரத்தில் பில்லா் அமைத்தும் கட்டடம் கட்டப்பட்டுள்ளது கண்டறியப் பட்டது.

இதைத்தொடா்ந்து கட்டத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் கட்டடத்தின் மின் இணைப்பையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT