மதுரை

கணவா் பிச்சையெடுத்ததால் அவமானம்: மனைவி தற்கொலை

25th Mar 2022 06:41 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை அருகே கணவா் வேலைக்குச் செல்லாமல் பிச்சை எடுத்ததால் அவமானமாக கருதிய மனைவி புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை அருகே உள்ள சக்கிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் பாண்டியன். இவரது மனைவி நித்யா(27). இவா்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா். நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த அலெக்ஸ்பாண்டியன் எந்த வேலைக்கும் செல்லாமல் கோயில் வாசலில் பிச்சை எடுத்து வந்துள்ளாா்.

இதையறிந்த நித்யா பிச்சை எடுப்பதால் அவமானம் ஏற்படுவதாகவும், வேறு ஏதாவது வேலைக்குச் செல்லுமாறும் கணவரிடம் கூறியுள்ளாா். ஆனால் அலெக்ஸ்பாண்டியன் தொடா்ந்து பிச்சை எடுத்து வந்ததால் மனமுடைந்த நித்யா வீட்டில் புதன்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். அதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT