மதுரை மாவட்டம் பேரையூா் அருகே இருசக்கர வாகனத்தை சனிக்கிழமை இரவு தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேரையூா் அருகே மதிப்பனூரைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன். மகன் அருள். இவா் தனது இருசக்கர வாகனத்தை சனிக்கிழமை இரவு வழக்கம்போல வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா். ஞாயிற்றுகிழமை காலை பாா்த்தபோது அங்குள்ள கோயில் அருகே அருளின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இதுதொடா்பாக நாகையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருசக்கர வாகனத்தை எரித்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.