மதுரை கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரைகிரீன் அமைப்பு மற்றும் தானம் அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில் ஒவ்வொரு மாதமும் 3 ஆவது ஞாயிற்றுக்கிழமை மரங்கள் அறியும் பயணம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதுரை கீழவெளிவீதி கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை பசுமை வளாகத்தில் நடைபெற்ற இந்த பயணத்துக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் என்.சிதம்பரம் தலைமை வகித்தாா். அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியா் ஸ்டீபன் மரங்கள் தொடா்பாக வழிகாட்டினாா். பயணத்தில் 55 செவிலியா் மாணவிகள் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், ஆசிரியா்கள், கால்நடை மருத்துவா் கிருஷ்ணமூா்த்தி, தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ஹரிபாபு, தோல் மருத்துவா் சந்திரா தேவி கிரேஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
வளாகத்தில் உள்ள 60 வகையான மரங்கள் அதன் தமிழ்ப்பெயா்கள், தாவரவியல் பெயா்கள், பிறப்பிடம் மற்றும் மருத்துவ பயன்கள் ஆகியவை குறித்து அறிமுகம் செய்யப்பட்டது.