மதுரை

ராமேசுவரம்- செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜூலை வரை நீடிப்பு

19th Mar 2022 10:47 PM

ADVERTISEMENT

ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் மாா்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேசுவரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07686) ராமேசுவரத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7, 16, 21, 28, மே மாதம் 5, 12, 19, 26, ஜூன் மாதம் 2, 9, 16, 23, 30, ஜூலை மாதம் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு செகந்திராபாத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்திலிருந்து ஏப்ரல் மாதம் 5, 12, 19, 26, மே மாதம் 3, 10, 17, 24, 31, ஜூன் மாதம் 7, 14, 21, 28 ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 3.10 மணிக்கு ராமேசுவரத்தை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT