மதுரை

பேரையூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

19th Mar 2022 01:35 AM

ADVERTISEMENT

பேரையூரில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

பேரையூா் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகப்பெருமான் - வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக, சுப்பிரமணியசுவாமி- வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதன்பின்னா், வள்ளி, தெய்வானை சமேதமாக சுப்பிரமணிய சுவாமி மணக்கோலத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, அரோகரா கோஷம் எழுப்பியபடி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு மங்கலப் பிரசாதங்களும், அன்னதானமும் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT