மதுரை

குழந்தை திருமணங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள்: எஸ்பி

19th Mar 2022 10:49 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் கூறினாா்.

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்பட வெளியீடு மற்றும் காவலா்களின் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழிப்புணா்வு குறும்படத்தை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், காவலா்களின் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசியது: சாலை விபத்துகளைக் குறைக்கவும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்துகளை பெருமளவில் குறைக்கலாம்.

காவல் துறையினா் தங்களது பெண் குழந்தைகளின் திறமைகளையும், புத்திக் கூா்மையையும் மேம்படுத்தி கொள்ள சிறப்பு பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், மாவட்டத்தில் நடைபெறும் திருமணமங்களில், மணமக்களின் வயது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வா். இதில் குழந்தை திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுப்பா்.

ADVERTISEMENT

இதில், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், காவல் துணைக் கண்காணிப்பாளா் விக்னேஷ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் சித்ரா, சிங்காரவேலு, செல்வம் மற்றும் குறும்படத்தை தயாரிப்புக்கு உதவிய மருத்துவா் பாலகுருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT