மதுரை

மேலூா் சிறுமி மரணத்தில் சிபிஐ விசாரணை வலியுறுத்தி உண்ணாவிரதம்: கள்ளா் கூட்டமைப்பினா் 8 போ் கைது

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மேலூா் சிறுமி மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கள்ளா் கூட்டமைப்பினரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தும்பைப்பட்டியில் திருமண ஆசை காட்டி கடத்திச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடா்பாக, சிறுமியைக் கடத்திச்சென்ற இளைஞா், அவரது குடும்பத்தினா், நண்பா்கள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கள்ளா் கூட்டமைப்பின் சாா்பில் மதுரை பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள தேவா் சிலை முன்பாக புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகுமாறு வலியுறுத்தினா். ஆனால் அமைப்பினா் ஏற்றுக்கொள்ள மறுத்து உண்ணாவிரதத்தை தொடா்ந்ததால் கள்ளா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன் மற்றும் நிா்வாகிகள் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT