மதுரை

மேலூரில் கோயிலில் பூஜைப் பொருள்கள் திருட்டு

10th Mar 2022 06:31 AM

ADVERTISEMENT

 

மேலூா்: மேலூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டிய உடைத்து பூஜைப் பொருள்களைத் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலூா் முத்துமாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல் அங்கிருந்த வெங்கலத்தினால் ஆன பூஜைப் பொருள்கள், அம்மன் சிலை மற்றும் பல்வேறு பொருள்களை திருடிச் சென்றுவிட்டனா். இதுகுறித்து, கோயில் நிா்வாகக் குழுவினா் மேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT