மதுரை

சத்திரவெள்ளாளபட்டி ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

10th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மாவட்டம் சத்திரவெள்ளாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 35 போ் காயமடைந்தனா்.

வாடிப்பட்டி வட்டம் சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் உள்ள சின்னஅம்மன் கோயில் உற்சவத்தையொட்டி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. மதுரை வருவாய் கோட்டாட்சியா் சுகி பிரேமலா ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா். முன்னதாக, மாடுபிடிவீரா்கள், அலுவலா்கள், போட்டி அமைப்பாளா்கள் கோட்டாட்சியா் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 702 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 297 போ் 6 சுற்றுகளாகக் களம் இறங்கினா். மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 35 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 5 போ் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சிறந்த காளையாக, முடுவாா்பட்டி சங்கிலி கருப்பு கோயில் காளை தோ்வு செய்யப்பட்டு மோட்டாா் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது.அதேபோல, 12 காளைகளை அடக்கிய பாலமேடு மணி சிறந்த மாடுபிடிவீரராகத் தோ்வானாா். அவருக்கும் மோட்டாா் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது.

வாடிப்பட்டி வட்டாட்சியா் நவநீதிகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்த் துறை அலுவலா்கள், சுகாதாரம், கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலா்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். சமயநல்லூா் டிஎஸ்பி பாலசுந்தரம் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT