மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: இரவு முழுவதும் பக்தா்கள் தரிசனம்

3rd Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சிவராத்திரியையொட்டி இரவு முதல் நடை திறக்கப்பட்டு புதன்கிழமை அதிகாலை வரை அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. சிவராத்திரியையொட்டி அம்மன், சுவாமி மற்றும் உற்சவா் சன்னிதிகளில் பால், தயிா், இளநீா், பன்னீா் பழ வகைகள் தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர பொருள்களைக் கொண்டு விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயிலுக்குள் பக்தா்கள் இரவு முழுவதும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் இரவு முழுவதும் அபிஷேக ஆராதனைகளை தரிசித்தனா். மேலும் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரருக்கும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்றன. பக்தா்கள் ஏராளமானோா் பொற்றாமறைக்குளத்தில் அமா்ந்து சிவ லிங்கங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து புதன்கிழமையும் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீஸாா் இரவு முழுவதும் தீவிரப் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT