மதுரை

ஊதிய உயா்வு கோரிக்கை: நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கத்தின் மனு தள்ளுபடி

3rd Mar 2022 06:28 AM

ADVERTISEMENT

 

மதுரை: பதவி உயா்வு தொடா்பாக நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வுபெற்ற பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், பழனி தாக்கல் செய்த மனு: நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் இளநிலை உதவியாளா் பதவி உயா்வுக்கு

வரி வசூலா் பணிதான் முதல்நிலையாகும். வரி வசூலா்களாக 10 ஆண்டுகள் பணிபுரிந்தால் தோ்வு நிலை அந்தஸ்தும், 12 ஆண்டுகள் பணிபுரிந்தால் சிறப்பு நிலை அந்தஸ்தும் வழங்கப்படும். சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற வரி வசூலா்களுக்கான ஊதியமும், இளநிலை உதவியாளா் பணிக்கான ஊதியமும் சமமாக இருக்கும். இதனால் சிறப்புநிலை வரி வசூலா்களை, இளநிலை உதவியாளா்களாக கருதி 5 சதவீத ஊதிய உயா்வு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: இளநிலை உதவியாளா் பதவி உயா்வுக்கு, வரி வசூலா் பணிதான் முதல் படிநிலை என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. மனுதாரா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனுதாரா் சங்கம் இந்த வழக்கின் மூலம் நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களின் பணி விதிகளை மாற்றி எழுத முயன்றிருக்கிறது. அவா்களது கோரிக்கை ஏற்புடையதல்ல எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT