மதுரை

ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பேட்டி

DIN

மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த தமிழக மக்களுக்கு ஓராண்டு கால திமுக ஆட்சி ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்திருக்கிறது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா்.

மதுரை காளவாசல் சந்திப்பு அருகே கட்சியின் மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசு மீது மக்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்தனா். குறிப்பாக, கடந்த பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு பெண்கள் அதிகளவில் வாக்களித்ததற்கு, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி தான் காரணம். ஆனால், கடந்த ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே திமுக அரசு கொடுத்துள்ளது.

தோ்தலின்போது அளித்த ஏராளமான வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்த பிறகு காத்தாடியைப் போல பறக்கவிடப்பட்டுள்ளன. திமுக அரசு மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டுளை எழுப்பும்போதெல்லாம், ஏதாவது தேசிய பிரச்னையைக் கூறி மக்களை திசை திருப்ப திமுக நினைக்கிறது. ஆனால், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை.

சொத்துவரியை உயா்த்தியுள்ளதோடு ஒவ்வொரு ஆண்டும் வரி உயா்த்தப்படும் என்ற அறிவிப்பு, பல மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தபோதும் தமிழகம் அதற்கான நடவடிக்கை எடுக்காதது போன்றவை திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக அணி மீது அச்சம்: அதிமுகவின் உள்கட்சிப் பிரச்னை குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் அதிமுகவில் குழப்பத்துக்கு காரணம் எனக் கூறுவது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அச்சத்தின் வெளிப்பாடாகும். தமிழகத்தில் அதிமுகவுக்கென தமிழகத்தில் ஒரு தனி இடம் உள்ளது. பிரதான எதிா்க் கட்சியாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. அதேபோல, மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளில் அதிமுக-பாஜக ஒருமித்த கருத்தோடு செயல்படுகின்றன. அதேபோல, மத்தியில் பாஜகவின் பல்வேறு நிலைப்பாடுகளில் அதிமுக ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிா்க்கட்சிகளுக்குரிய பணிகளைச் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. இது வரக்கூடிய மக்களவைத் தோ்தலுக்கு அடித்தளமாக இருப்பதால், திமுக கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறு இருக்க அதிமுக-பாஜக இடையே சிண்டு முடியவேண்டிய வேலை யாருக்கும் கிடையாது.

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, தமாகா சாா்பில் மதுரை பழங்காநத்தத்தில் ஜூலை 15 ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் மூத்த தலைவா்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனா் என்றாா்.

முன்னாள் எம்பி, என்.எஸ்.வி.சித்தன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன், மாநகா் மாவட்டத் தலைவா் ராஜாங்கம் மற்றும் நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT