மதுரை

மதுரை- திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்

30th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவலுக்கு முன்பு இயங்கிவந்த மதுரை- திண்டுக்கல்- மதுரை ரயிலை மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

திண்டுக்கல்- மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில் (06609) திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 11 முதல் காலை 8 மணிக்கு புறப்பட்டு காலை 9.20 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை- திண்டுக்கல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் (06610) ஜூலை 10 முதல் மதுரையிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திண்டுக்கல்லை சென்றடையும். இந்த ரயில்கள் அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, வாடிப்பட்டி, சோழவந்தான், சமயநல்லூா், கூடல்நகா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT