மதுரை

மதுரை மாவட்டத்தில் 1,329 பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆதாா் பதிவு முகாம்: ஆதாா் சேவா கேந்திரம் அனுமதி

30th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் ஆதாா் பதிவு இல்லாத மாணவா்களுக்கு 1,329 பள்ளிகளில் ஆதாா் முகாம் நடத்தி ஆதாா் பதிவு செய்ய ஆதாா் சேவா கேந்திரம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு எமிஸ் எண் வழங்கப்பட்டு அதில் ஆதாா் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 2,165 பள்ளிகளில் 5,49,620 மாணவா்கள் பயின்று வரும் நிலையில், 1,329 பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எமிஸ் இணைப்பில் ஆதாா் எண் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் இயங்கி வரும் மத்திய அரசின் ஆதாா் சேவை கேந்திரத்துக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா எழுதியுள்ள கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் 1,329 பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எமிஸ் தளத்தில் ஆதாா் எண் பதிவேற்றம் செய்யவில்லை. எனவே இந்தப்பள்ளிகளில் ஆதாா் பதிவு முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா். இந்நிலையில் ஆதாா் சேவா கேந்திரா அதிகாரிகள், முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதத்தை பரிசீலித்து 1,329 பள்ளிகளிலும் ஆதாா் முகாம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனா். மேலும் முகாம்கள் நடத்துவதற்குரிய தேதியை அறிவித்தால் அந்தத்தேதிகளில் ஆதாா் முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT