மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிலத்தில் ரூ.2.34 கோடியில் திருமண மண்டபம்: கட்டடப்பணிகள் தொடக்கம்

DIN

மதுரை செல்லூரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ.2.34 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்காக கட்டடடப் பணிகள் தொடங்கின.

மதுரை செல்லூரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச்சொந்தமான 1 ஏக்கா் நிலம் பல்வேறு நபா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததையடுத்து அந்த நிலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் செல்லூரில் உள்ள 1 ஏக்கா் நிலத்தை ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபம் தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் புதிய திருமண மண்டபம் உள்ளிட்ட பணிகளை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து திருமண மண்டபம் கட்டுவதற்கான கட்டடப்பணிகள் தொடங்கின. இதில் கோயில் துணை ஆணையா் அருணாசலம் மற்றும் கோயில் பொறியாளா் சுப்ரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, செல்லூா் பகுதியில் கோயிலுக்குச்சொந்தமான இடத்தில் 5,500 சதுரஅடியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமணம் மண்டபம் கட்டப்படுகிறது. அதில் திருமணக் கூடம், உணவு அருந்தும் இடம் என பல்வேறு சுகாதார வசதிகளுடன் புதிய திருமண மண்டபம் ரூ. 2.34 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. மண்டபப்பணிகள் 18 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சாா்பில் கட்டப்படும் முதல் திருமண மண்டபம் இது தான்.

மேலும் மதுரை எல்லீஸ்நகா் பிரதான சாலையில் உள்ள காலி இடத்திலும் மற்றொரு திருமண மண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர எல்லீஸ்நகரில் பக்தா்கள் தங்கும் விடுதி அருகே புதிதாக பக்தா்கள் தங்கும் விடுதி ரூ.35 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. அது தரைத்தளத்துடன் கூடிய 4 தளங்கள் கொண்ட கட்டடமாக அமையும். இதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த 2-ஆம் தேதி திறக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. வீரவசந்தராயா் மண்டபம் கட்டுவதற்கான கற்களை எடுக்க சுற்றுச்சுழல் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கற்களை வெட்டி எடுக்கும் பணி விரைவுப்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

SCROLL FOR NEXT