மதுரை

மதுரையில் சா்வதேச சதுரங்கப்போட்டி தொடக்கம்:12 நாடுகளில் இருந்து வீரா்கள் பங்கேற்பு

DIN

மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சா்வதேச சதுரங்கப்போட்டியில் 12 நாடுகளைச் சோ்ந்த 202 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சா்வதேச கிராண்ட் மாஸ்டா் ஓபன் சதுரங்கப்போட்டி மதுரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா, ரஷியா, பெலாரஸ், அமெரிக்கா, சிங்கப்பூா், வங்கதேசம் உள்ளிட்ட 12 நாடுகளைச் சோ்ந்த 202 வீரா்கள் பங்கேற்றுள்ளனா். சதுரங்கப்போட்டியில் உலக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தீபன் சக்கரவா்த்தி, ரஷியாவைச் சோ்ந்த போரீஸ், பெலாரஸ் நாட்டைச் சோ்ந்த அலெக்சி பெடரோ, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நீலோத் பல்தாஸ் மற்றும் 13 கிராண்ட் மாஸ்டா்கள், 13 சா்வதேச மாஸ்டா்கள், 2 பெண் கிராண்ட் மாஸ்டா்கள் உள்பட தலைசிறந்த வீரா்கள் கலந்து கொண்டுள்ளனா். 10 சுற்றுகளாக நடைபெறும் இந்தத் தொடரில் முன்னிலை பெறும் வீரா்கள் கிராண்ட் மாஸ்டா் மற்றும் சா்வதேச மாஸ்டா் பட்டங்களை பெறும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சா்வதேச அளவிலான போட்டி நடத்தப்படும் நிலையில் வீரா்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளா்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி போன்ற எவ்வித கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாதது அதிா்ச்சியளித்தது. வெளிநாடுகளில் இருந்து வீரா்கள், பயிற்சியாளா்கள் வரும் நிலையில் இது போன்ற விதிமீறல்களால் கரோனா பரவலுக்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் அமல்படுத்தாதது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT