மதுரை

வைகை விரைவு ரயில் இன்று செங்கல்பட்டில் இருந்து புறப்படும்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் புதன்கிழமை (ஜூன் 29) செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை நடைபெறுகிறது. இதனால், புதன்கிழமை காலை 5.30 மணிக்கு காரைக்குடியிலிருந்து புறப்படும் காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயில் (12606) செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். அன்றைய தினம் சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை - மதுரை வைகை விரைவு ரயில் (12635), செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான புறப்படும் நேரமான, பிற்பகல் 2.50 மணிக்குப் புறப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT