மதுரை

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்ரூ.10.11 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் வாயிலாக ரூ.10.11 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் மறைமுக ஏலம் வாயிலாக, விவசாயிகள் கொண்டு வரும் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 25 விவசாயிகள் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 391 தேங்காய்களைக் கொண்டு வந்திருந்தனா்.

மதுரை விற்பனைக்குழுவின் கண்காணிப்பாளா் திருமுருகன் தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த 15 வியாபாரிகள் பங்கேற்றனா். இதில் அதிகபட்சமாக ரூ.10.11-க்கும் குறைந்த பட்சமாக ரூ.6.39-க்கும் தேங்காய்கள் ஏலம் போனது. ஏலம் வாயிலாக ரூ.10.11 லட்சத்துக்கு தேங்காய் வா்த்தகம் நடைபெற்றது. இதேபோல, 1,213 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ரூ.81.70-க்கு ஏலம் போனது. மொத்தம் ரூ.93 ஆயிரத்து 892-க்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT