மதுரை

நெல்லை வனப்பகுதியில் உள்ள உயா்மட்டக் கால்வாயைசுத்தம் செய்ய நடவடிக்கை: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள உயா்மட்டக் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி ராதாபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்

கே.ராமராஜா தாக்கல் செய்த மனு:

ராதாபுரம் வட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகும் காளிசம்பன் ஓடை ஆலந்துறை ஆற்றுடன் இணைந்து கன்னியாகுமரி வழியாக கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை ராதாபுரம் பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆலந்துறை ஆற்றில், காஞ்சிப்பாறை என்ற பகுதியில் தடுப்பணையும், ஆலாந்துறை ஆறு மற்றும் சூறாவளி அணைக்கட்டு இடையே உயா்மட்ட நீா்வரத்துக் கால்வாயும் கட்டப்பட்டுள்ளது. இந்த உயா்மட்டக் கால்வாயானது தற்போது குப்பைகள், புதா்கள், கழிவுப் பொருள்களால் நிரம்பி பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால், இந்த கால்வாயில் தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்தக் கால்வாயை சுத்தம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் குறிப்பிட்டுள்ள கால்வாய், வனப் பகுதியில் அமைந்துள்ளது. அங்கு கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும் அந்த கால்வாயை முறையாகச் சுத்தம் செய்து சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா். இதைப் பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT