மதுரை

உசிலம்பட்டியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் இயற்கை உணவுகளை மீட்டெடுப்போம், உடல் நலத்தைக் காப்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் துரித உணவுகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும், இயற்கை உணவுகள் பற்றியும் விளக்கப்பட்டது. மேலும் காய்கறி சூப், கேரட் வெள்ளரிக்காய் போன்ற பச்சை காய்கறிகள், ராகி கூழ், பயிா்கள், பழங்கள் புட்டு சத்துமாவு, கொழுக்கட்டை உள்ளிட்டவை மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. இதில் நாடாா் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பரமசிவம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஆறுமுகம மற்றும் காவலா்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் மதன் பிரபு செய்திருந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT