மதுரை

மேலவளவு படுகொலை தினத்தையொட்டி பொதுக் கூட்டம்நடத்த அனுமதி: உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

DIN

மேலவளவு படுகொலை தினத்தையொட்டி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, அதுதொடா்பாக தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள மேலவளவு ஊராட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த முருகேசன் உள்ளிட்ட 6 போ், 1997 ஜூன் 30 இல் படுகொலை செய்யப்பட்டனா். அவா்களது நினைவாக, மேலவளவு கிராமத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் அஞ்சலி செலுத்துவது வழக்கம். 25-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விடுதலைச் சிறுத்தகைகள் கட்சி சாா்பில் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய விசாரணைக்குப் பிறகு ஒத்தி வைக்கப்பட்ட இந்த மனு, நீதிபதி வி. சிவஞானம் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பொதுக் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT