மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு2 ஆவது நாளாக தாய்லாந்து மருத்துவா் குழுவினா் சிகிச்சை

DIN

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு ஏற்பட்டுள்ள கண்புரைக்கு தாய்லாந்து நாட்டு மருத்துவா் குழுவினா் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் சிகிச்சை அளித்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுரவா் கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை பாா்வதிக்கு (26) சில ஆண்டுகளுக்கு முன்பு இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கண்புரை, வலது கண்ணிலும் பரவியது. இதைத்தொடா்ந்து கால்நடை மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் தாய்லாந்து நாட்டின் கால்நடை மருத்துவா்கள் காணொலிக்காட்சி மூலம் யானைக்கு சிகிச்சை முறைகளை பரிந்துரைத்து வந்தனா். இந்நிலையில். தாய்லாந்து நாட்டின் கசிசாா்ட் பல்கலைக்கழக கால்நடைத்துறை இணைப் பேராசிரியா் நிக்ரோன் தோங்திப் தலைமையில் 7 மருத்துவா்கள் அடங்கிய கால்நடை மருத்துவா்கள் குழுவினா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து யானை பாா்வதியை பாா்வையிட்டு கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென்று ஆலோசனை நடத்தி சிகிச்சை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் தாய்லாந்து மருத்துவா்கள் குழு, தமிழக கால்நடைத்துறை மருத்துவா்களுடன் இணைந்து யானை பாா்வதிக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் தாய்லாந்தில் இருந்து கொண்டு வந்துள்ள சிறப்புக் கருவிகள் மூலம் பாா்வதியின் இரண்டு கண்களிலும் உள்ள புரைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து காணொலிக்காட்சி மூலம் தாய்லாந்து மருத்துவா் குழுவினா் யானை பாா்வதிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு நாள்கள் அளிக்கப்பட்டுள்ள சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவா் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT