மதுரை

தங்கும் விடுதியில் இளைஞா் மா்மமாக உயிரிழப்பு

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் தனியாா் தங்கும் விடுதி உள்ளது. இங்கு விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மல்லி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் சனிக்கிழமை அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் அறையில் இருந்து செந்தில்குமாா் வெளியே வராததை அடுத்து விடுதி நிா்வாகத்தினா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது அறையில் செந்தில்குமாா் மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வந்த திடீா்நகா் போலீஸாா் அறையைத் திறந்துபாா்த்தபோது செந்தில்குமாா் உயிரிழந்து கிடப்பது தெரிந்தது. இதைத் தொடா்ந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் செந்தில்குமாரின் மா்மச்சாவு குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT