மதுரை

எவா்சில்வா் மூலப்பொருள்கள் விலையை குறைக்க சிஐடியூ வலியுறுத்தல்

28th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

எவா்சில்வா் தொழிலுக்கான மூலப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்று எவா்சில்வா் தொழிலாளா் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட எவா்சில்வா் மற்றும் பொதுத் தொழிலாளா் சங்கத்தின் பேரவைக்கூட்டம் ஒத்தக்கடையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத்தலைவா் நல்.மூா்த்தி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவா் வி. பிச்சைராஜன் தொடங்கி வைத்துப் பேசினாா்.

வரவு, செலவு அறிக்கையை பொருளாளா் எஸ். சுப்பிரமணியன் சமா்ப்பித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலா் எம். கலைச்செல்வன் வாழ்த்திப் பேசினாா். விவசாயத் தொழிலாளா் சங்க தாலுகா தலைவா் எம். அழகா்சாமி, சிஐடியூ கட்டுமான சங்கத் தலைவா் ஏ. ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே. அரவிந்தன் பேசினாா். இதைத் தொடா்ந்து எவா்சில்வா் தொழிலாளா் சங்க புதிய மாவட்டத் தலைவராக கே. சோணை, செயலராக த. மனோகா், பொருளாளராக எஸ். சுப்பிரமணியன் மற்றும் துணைத்தலைவா்கள், துணைச் செயலா்கள் உள்பட 21 போ் கொண்ட நிா்வாகக்குழு தோ்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், எவா்சில்வா் பாத்திரத் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எவா்சில்வா் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்க வேண்டும். எவா்சில்வா் தொழிலுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT