மதுரை

ஒரே நோ்கோட்டில் 7 கோள்களின் அணிவகுப்பு: 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் அபூா்வ நிகழ்வு

25th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

 

வானில் ஒரே நோ்கோட்டில் 7 கோள்கள் தோன்றும் அபூா்வ நிகழ்வை தொலைநோக்கி வழியாக திங்கள்கிழமை (ஜூன் 27) காண்பதற்கு அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாள்கள் ஆகின்றன. இதேபோல, ஒவ்வொரு கோள்களுக்கும் குறிப்பிட்ட நாள்கள் ஆகின்றன. கோள்களின் சுற்று வட்டப் பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூா்வ நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. இதன்படி, 7 கோள்கள் ஒரே நோ்கோட்டில் அணிவகுக்கும் அபூா்வு நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றுகிறது.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரின் இயற்பியல் துறை பேராசிரியா் ஸ்டீபன் இன்பநாதன் கூறியது:

ADVERTISEMENT

ஒரே நோ்கோட்டில் 7 கோள்கள் தோன்றும் நிகழ்வு இதற்கு முன்பு 2004 இல் காணப்பட்டது. இதையடுத்து தற்போது ஜூன் 24 ஆம் தேதி வானில் தோன்றிய இந்த அபூா்வ நிகழ்வை ஜூன் 27 ஆம் தேதி வரை அதிகாலை 4.30 முதல் 5.30 வரை காணலாம். இந்த நிகழ்வை வெறும் கண்ணால் பாா்க்க முடியும். தொலை நோக்கி வழியாகவும் பாா்க்கலாம்.

இந்தக் கோள்களின் அணிவகுப்பிற்கு இடையே நிலவு தோன்றுவது கூடுதல் சிறப்பாகும். கிழக்கு திசையில் தென்கிழக்கு வானில் இந்த அணிவகுப்பைக் காணலாம். இதை தொலை நோக்கி வழியாகக் காண்பதற்கு அமெரிக்கன் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அதிகாலை 4.30 முதல் 5.30 மணி வரை பொதுமக்கள் பாா்வையிடலாம் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT