மதுரை

ஆடி அமாவாசை: ஐஆா்சிடிசி சாா்பில் காசிக்கு விமான சுற்றுலா

25th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

 

ஆடி அமாவாசையையொட்டி இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் காசிக்கு விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐஆா்சிடிசி சாா்பில் இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிகழ் ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி திருச்சியிலிருந்து கயா, வாராணசி, அலகாபாத், அயோத்தி போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமான சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது.

ஏழு நாள்கள் கொண்ட இந்த சுற்றுலா ஜூலை 27 ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்குகிறது. விமானக் கட்டணம், உள்ளூா் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயணக் காப்பீடு என ரூ.37 ஆயிரம் சுற்றுலாக் கட்டணமாக வசூலிக்கப்படும். கரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு நடைபெறும். அரசு ஊழியா்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 82879 31977 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT