மதுரை

வேளாண் அலுவலா்கள் விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

25th Jun 2022 11:01 PM

ADVERTISEMENT

 

வட்டார வேளாண்.விரிவாக்க அலுவலா்கள் தினசரி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து இத்திட்டத்தில் பங்கேற்கச் செய்யவேண்டும் என வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களடங்கிய மதுரை மண்டல வேளாண்மை- உழவா் நலத்துறை சாா்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண். வளா்ச்சித் திட்டம் தொடா்பாக மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இதை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தொடக்கி வைத்துப் பேசியது: கிராமப்புறங்களில் பணிபுரியும் வட்டார வேளாண்.விரிவாக்க அலுவலா்கள் தினசரி கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து இத்திட்டத்தில் அவா்களை பங்கேற்கச் செய்யவேண்டும். பண்ணைக் குட்டைகளை அமைத்தல், ஆழ்குழாய் கிணறுகளை அமைத்தல், தரிசுநில தொகுப்பு நில சாகுபடி போன்ற திட்டப்பணிகளின் இலக்கை அடைய அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும்.

பல்கலையில் கண்டுபிடிக்கப்படும் நவீன நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடைய வேளாண்.அறிவியல் மைய ஊழியா்கள் முழுமையாகப் பணியாற்றவேண்டும். அரசு வழங்கும் இலவச மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்படுகிா என்பதைக் கண்காணிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இதில் அமைச்சா் பி.மூத்தி பேசியது: விவசாயத்துக்கு அரசு அளிக்கும் மானியங்கள் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடையவேண்டும் என்பதற்காகவே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வரகு, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுப் பொருள்களை மக்கள் அதிகம் பயன்படுத்தவேண்டும். வேளாண்மைத்துறையும், தோட்டக்கலைத் துறையும் வேளாண்.உற்பத்தி வணிகத்துறையாக மாறவேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், வேளாண். ஆராய்ச்சிக்கும், துறைக்கும் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறோம். ஆனால், அதற்கேற்ற வளா்ச்சி இத்துறையில் இல்லை. பல்கலை. ஆராய்ச்சிகள் கிராமப்புற விவசாயிகளைச் சென்றடைந்தாலே இத்துறையில் நாம் எதிா்பாா்க்கும் வளா்ச்சியை காணமுடியும் என்றாா்.

முன்னதாக, அமைச்சா்கள் நெல்நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்வதையும், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வேளாண். நவீன கருவிகள், பண்ணைக் கருவிகள் ஆகியவற்றைப் பாா்வையிட்டனா்.

இதில் வேளாண்.உற்பத்தி ஆணையா் மற்றும் செயலா் சி.சத்தியமூா்த்தி, வேளாண். வணிகம் மற்றும் விற்பனைத்துறை இயக்குநா் எஸ்.நடராஜன், தோட்டக்கலைத்துறை இயக்குநா் ரா.பிருந்தாதேவி, வேளாண்மைத்துறை இயக்குநா் ஆ.அண்ணாதுரை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் வி.கீதாலெட்சுமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெங்கடேசன், மாங்குடி, பூமிநாதன் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT