மதுரை

வாடிப்பட்டி அருகே மாயமான 3 மாத குழந்தை மீட்பு

25th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

 

வாடிப்பட்டி அருகே மாயமான 3 மாத குழந்தையை மீட்ட போலீஸாா், அக் குழந்தை சட்டவிரோதமாக தத்து கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சின்னமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அங்கம்மாள். இவருக்கு சித்தாலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மாா்ச் 3 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து மாா்ச் 9 ஆம் தேதி குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்ட அங்கம்மாள், இப் பகுதியில் உள்ள தாய்-சேய் விடுதியில் தங்கியிருந்துள்ளாா். அதன் பின்னா் சின்னமநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளாா்.

இதனிடையே, அங்கம்மாள் வீட்டிற்கு கிராம சுகாதார செவிலியா் சென்றபோது, அங்கு குழந்தை இல்லை. அதுகுறித்து கேட்டதற்கு, தனது உறவினா் வீட்டில் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா். மேலும் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறியதையடுத்து, சந்தேகமடைந்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கம்மாள் தலைமறைவாகிவிட்டாா்.

ADVERTISEMENT

பின்னா் அவா் ஏற்கெனவே கூறியிருந்த தகவல்களின் அடிப்படையில் காவல் துறையினா் மற்றும் குழந்தைகள் நலக் குழுவினா், அங்கம்மாளின் குழந்தையை சனிக்கிழமை மீட்டனா். அங்கம்மாள் தங்களது உறவினா்தான் என்றும் தத்து எடுக்கவில்லை எனவும் குழந்தையைப் பராமரித்து வந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து மதுரையில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு அக்குழந்தை கொண்டு வரப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அங்கம்மாளை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் கைது செய்யப்பட்ட பிறகே உண்மை தெரியவரும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT