மதுரை

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் அரவையைத் தொடங்க சிறப்பு அலுவலா்கள் குழு ஆய்வுவேளாண் அமைச்சா் தகவல்

25th Jun 2022 11:00 PM

ADVERTISEMENT

 

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையில் அரவையைத் தொடங்குவதற்காக சிறப்பு அலுவலா்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அக் குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், சா்க்கரை ஆலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது:

தமிழகத்தில் கரும்பு அரவை செய்வதற்கு, 16 அரசு ஆலைகள்,

ADVERTISEMENT

2 பொதுத்துறை ஆலைகள், 24 தனியாா் ஆலைகள் என மொத்தம் 42 சா்க்கரை ஆலைகள் உள்ளன. அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்குவதற்கு, நாளொன்றுக்கு சராசரியாக 2,500 டன் கரும்பு தேவைப்படுகிறது.

மதுரை மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல் மற்றும் விருதுநகா் மாவட்டங்களின் சில பகுதிகள் இந்த ஆலையின் எல்லைப் பகுதிகளாக இருக்கின்றன. 2019-2020 ஆம் ஆண்டில் கரும்பு பற்றாக்குறை காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் இந்த ஆலையில் கரும்பு அரவையைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதற்கான சிறப்பு அலுவலா்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனா். இந்த குழு சமா்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆலையின் முழுமையான செயல்பாட்டிற்கு போதிய கரும்பு உற்பத்தி அவசியமாகும். இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இதில், வணிகவரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி, வேளாண் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, இயக்குநா் எஸ்.நடராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.கீதாலெட்சுமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், வேளாண் அலுவலா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT