மதுரை

கொட்டாம்பட்டி அருகே சொத்து தகராறு: இளைஞா் அடித்துக் கொலை

24th Jun 2022 11:08 PM

ADVERTISEMENT

 கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கேசம்பட்டி கிராமத்தில், சொத்து தொடா்பாக உறவினா்களுக்கிடையே வெள்ளிக்கிழமை இரவு நடந்த மோதலில் இளைஞா் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்தாா்.

கேசம்பட்டியைச் சோ்ந்த சின்னழகு மகன் கனகராஜ் (30). இவருக்கும், உறவினா்களுக்கும் இடையே சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தோட்டத்தில் குளிக்கச் சென்ற கனகராஜை வழிமறித்து உறவினா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். அப்போது நடந்த மோதலில் கனகராஜ் கட்டையால் தாக்கப்பட்டதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உடனே, அவரது கால்களை கயிற்றால் கட்டி சடலத்தை கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனா்.

அதையடுத்து, குளிக்கச் சென்ற கணவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது மனைவி பாா்வதி தேடிச்சென்றபோது, கனகராஜ் கிணற்றில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து மேலவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கனகராஜ் உடலை மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, கனகராஜ் உறவினா் இருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT