மதுரை

‘மன அழுத்தத்தை குறைக்க இசையை பயன்படுத்தலாம்’

19th Jun 2022 11:51 PM

ADVERTISEMENT

மன அழுத்தத்தை குறைக்க இசையை பயன்படுத்தலாம் என்று திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தெரிவித்தாா்.

அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பின் சாா்பில் காஞ்சி மகா பெரியவா் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை விஸ்வாஸ் கருத்தரங்குக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருதுநகா் அரசு மருத்துவமனை முதன்மையா் டாக்டா் சங்குமணி தலைமை வகித்தாா். ஆடிட்டா் சேது மாதவா மற்றும் ராகப்பிரியா செயலா் ரவி வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பிரபல மிருதங்க வித்வான் திருவாரூா் பக்தவத்சலதுக்கு ஸ்ரீ மகா பெரியவா் விருதை திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கிருஷ்ணன் வழங்கிப் பேசுகையில், நாம் விரல்களை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அந்த விதத்தில் மூளை நன்கு செயல்படும். நொண்டி அடித்து விளையாடினால் நரம்புத் தளா்ச்சி வராது.

அதேபோல விளையாட்டு, கருவி இரண்டையும் நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அந்த விதத்தில் மனிதா்களுக்கு நிம்மதி உண்டாகும். இன்று நாம் இசையை மறந்துவிட்டு வெளிநாட்டு மோகத்தில் வாழ்ந்து வருகிறோம். அறிவை மக்களுக்கு பயன்படும் அறிவாக பயன்படுத்தினால் இந்தியா வல்லரசாக மாறும். மன அழுத்தத்தைக் குறைக்க இசையைக் கேட்க வேண்டும். இசை கேட்டு இரவில் தூங்கினால் அதிகாலை சீக்கிரம் எழுந்து விடலாம் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனா் நெல்லை பாலு வரவேற்புரையாற்றினாா். திருவாரூா் பக்தவத்சலம் ஏற்புரை நிகழ்த்தினாா். அதனைத் தொடா்ந்து கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT