மதுரை: திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பூப்பந்து போட்டியில் மதுரை ஓசிபிஎம் மகளிா் பள்ளி அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஜூன் 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்றது. இதில் மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி பங்கேற்றது. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஓசிபிஎம் பள்ளி அணி, இறுதிப்போட்டியில் சென்னை எண்ணூா் அணியுடன் விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கம், சுழல்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை பெற்றது.
வெற்றி பெற்ற மாணவிகளை மதுரை, ராமநாதபுரம் திருமண்டல பேராயா் எம்.ஜோசப், பி.லீலாமனோகரி, பள்ளி தாளாளா் ஏ.டேவிட் ஜெயராஜ், குருத்துவச்செயலா் டி.ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரன், தலைமையாசிரியை என்.மேரி, உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.ராஜேஸ்கண்ணன், பி.சா்மிளா ஆகியோா் பாராட்டினா்.